இணையத்தில் 'புது எழுத்து' இலக்கிய இதழ்

ஆல்ப்ரட் ஹிட்ச்சாக் நேர்காணல் - தமிழில்: அசதா

ஒருபோதும் நான் கேமரா வழியாகப் பார்ப்பது கிடையாது, உங்களுக்குத் தெரியும். எனக்கு என்ன தேவை என்பதை அறியுமளவுக்கு கேமராமேன் என்னைப் புரிந்து வைத்திருக்கிறார். சந்தேகம் ஏற்படும்போது ஒரு செவ்வகம் வரைந்து அதற்குள் காட்சியை வரைந்து காட்டுவேன். அதில் முக்கிய விஷயம் என்னவென்றால் நாம் பணிபுரிவது இரு பரிமாண ஊடகத்தில் இதை மறக்கக் கூடாது. ஒரு செவ்வகத்தை நீங்கள் நிரப்ப வேண்டும். அதை நிரப்புங்கள். அதை நிரப்புவதற்கான விஷயங்களை பொருத்தமுடன் ஒன்றமையுங்கள். இதற்கு கேமரா வழியாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. காட்சியை உருவாக்கும்போது உருவங்களைச் சுற்றிலும் அவற்றின் தலைகளுக்கு மேலும் இடம், வெளி இவை இருப்பது எனக்குப் பிடிக்காது என்பது கேமரா மேனுக்குத் தெரியும்.

உழவின் திசைவழி மரபிலிருந்து நவீனம் நோக்கியதா?: அ. முத்துக்கிருஷ்ணன்

கிராமங்களை அழிக்கும் வரலாற்று சதி தான் பசுமை புரட்சி. யூரியா, பொட்டாஸ், அமோனியா, பூச்சிக் கொல்லிகள் என இந்த அபாய விஷக் கூட்டணி நம் மண்ணின் தன்மையை உருமாற்றி அதன் எல்லா வளங்களையும் அழித்தது. விவாசாயியின் நண்பன் மண்புழு என்று தவறாது பாடங்களில் இடம் பெற்ற அந்த ஜீவன் இயற்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிவுக்கு சென்றது. மண்புழு மண்ணை அழகாய் கோதுவது மட்டுமின்றி அதன் எச்சம் உலகின் எந்த உரத்திற்கும் ஒப்பில்லை. எத்திசையிலும் உயிரற்ற நிலம் பரவிக்கிடந்தது. மண் நிர்மூலமாக்கப்பட்டது.

சாலமிகுத்துப் பெயின்: கால பைரவன்

அவளின் இந்த கேள்வி என்னுள் கலவரத்தை ஏற்படுத்தியது. சொல்லப்படாத வார்த்தைகளும் புரிந்து கொள்ளப்படாத பிரியமும் என்னுள் அப்படியே தேங்கிக் கிடந்தன. கல்லெறிந்த குளத்தின் அதிர்வுகளைப் போல மெல்ல அவளது இருப்பும் இயக்கமும் எனது மனதில் கவியத் தொடங்கிய போது, நான் தூக்கத்தை இழக்கத் தொடங்கியிருந்தேன். நீண்ட இரவுகளையும் குட்டி பகல்களையும் கற்பனை செய்து பார்க்கத் தொடங்கினேன். என் மனதில் உள்ளதை அவளிடம் எப்படி சொல்வது என்ற குழப்பமும், சொன்னால் எப்படி அவள் எடுத்துக் கொள்வாள் எனும் ஐயமும் என்னை மெல்ல அரிக்கத் தொடங்கியிருந்தது.

துயரத்தின் சகோதரி ஐரீஸ் முர்டாச்: இரா. நடராசன்

ஐரீஸ் முர்டாச் ஒரு பெண் எழுத்தாளர் என்பதாலேயே பல அவமானங்களை எதிர் கொண்டார். இறந்து பல ஆண்டுகள் கழித்தும் 2003ல் ஆங்கிலேய எழுத்தாளர் ஏ.என்.வில்சன் எழுதி வெளிவந்த ஐரீஸ் முர்டாச்-நான் அறிந்த வரை (Iris Murdoch-as I knew her) நூலே ஒரு சாட்சி. (anti biography)க்கு ஒரு சான்று. முர்டாச்சின் எழுத்துலகில் புகுந்து விமர்சிக்காமல் யாரோடு வேண்டுமானாலும் படுப்பதற்கு தயாராக இருந்தார் என்பது வரை அவரது வாழ்வை மரியாதை குறைவிற்கு உட்படுத்தி கொச்சையாக்கியவர் வில்சன். அவர் மட்டுமல்ல ஐரீஸ் முர்டாச்சின் எழுத்துக்கள் குறித்து ஆகச் சரியான விமர்சனம் இன்றுவரை பதிவாகவே இல்லை என்றே சொல்லலாம்.

வார்ஸாவின் கடைசி யூதர்கள்: ஆப்ரகாம் பிரம்பெர்க்

மீடிம் சானட்டோரியத்தின் குழந்தைகளும் பணியாளர்களும் எவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டனர் என்பதை குல்ரெஸ்கி அனல் பறக்கும் வார்த்தை களால் விவரித்துள்ளார். முன்னேறி வந்து கொண்டிருந்த ஜெர்மானிய படைகளிடமிருந்து தப்பிக்க, என் பெற்றோருடன் நானும் இன்னும் சிலரும் சானட்டோரியத்தை விட்டு 1939, செப்டம்பர் ஆறாம் தேதியன்று குதிரை வண்டிகளில், ஆயிரக்கணக்கான போலந்து மக்களைப் போலவே கிழக்கு நோக்கி பயணமானோம். சானட்டோரியத்தில் இருந்த குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் இறுதி முடிவைப் பற்றிய செய்தி அமெரிக்காவில் இருந்த எங்களுக்கு 1942ஆம் ஆண்டின் கோடையில் கிடைத்தது. அவர்கள் அனைவரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்கள் உட்பட சுற்றி வளைக்கப்பட்டு ட்ரெப்லின்காவிற்கு அனுப்பப்பட்டனர்.


மேலும் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் படிக்க, www.puthuezhuthu.keetru.com

ஈழத்தமிழ் அகதிகள்: முகம் இருந்தும் முகவரி அற்றவர்கள்

விழிப்புணர்வு செப்டம்பர் இதழ்
www.vizhippunarvu.com

அரவாணிகள் மனுஷிகள் தான்... - ப்ரியா பாபு நேர்காணல்

எந்த வெளிநாட்டுலேயும் Othersற கேட்டகிரி இல்ல. நாங்க விரும்புறது எங்கள பெண் (மாறிய பாலினம்) Female (T.G) ன்னு அங்கீகரிக்கனும்னு கேக்குறோம். ஏன்னா ஒரு பெண் ஆகணுங்கிறதுக்காத்தானே இவ்வளவு வலி, வேதன, கிண்டல், எல்லாத்தையும் சகிச்சிக்கிறோம். ஒரு பெண்ணாகனுங்றதுக்காகத்தானே குடும்பம், உறவு, கல்வி, வேலை, சொத்து சுகமான வாழ்க்கை எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்கிறோம். அதனாலத்தா பெண்ணுக்கு கேக்குறோம். மாறிய பாலினம்கிற அடையாளம் நான் இயற்கையில ஆண் ஆனா நா என் பாலினத்த மாத்திகிட்டேன்னு வெளிக்காட்டுற ஒரு அடையாளம்.


பொய் வழக்குகள்: வழக்கறிஞர் அ. அருள்மொழி

பெண்களுக்கு நமது சமூகம் செய்த, செய்து வருகின்ற கொடுமைகளின் எதிர்வினையாகவும், தலைமுறை தலைமுறையாக அடிமனதில் தேங்கி விட்ட கசப்பின் வெளிப்பாடாகவும், தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு சிலரை துன்பப்படுத்தினால் தவறில்லை என்ற மனப்போக்காகவும் மாறி வருவதை நடைமுறையில் உணர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது. 80 வயதைத் தாண்டிய தாத்தா பேத்தியின் மகளது திருமணத்தைப் பார்க்க ஆசைப்படுகிறார். அது வாழ்நாளை நீட்டித்துக் கொள்ளும் ஆசையின் ஒரு வழி. காரணம் வாழ்க்கை ஆண்களுக்கு அவ்வளவு சுவைக்கிறது. ஆனால் 50 வயதைத் தாண்டாத பல பெண்கள் மரணம் என்பதை தலையணைக்குப் பக்கத்தில் வைத்த தண்ணீர் செம்பைப் போல் கருதுகிறார்கள். எந்த நிமிட தாகத்திலும் அதைக் குடித்து விட அவர்கள் தயார். ஏன் இந்த நிலை என்று நினைக்கிறோமா?


வஞ்சித்த செர்னோபில்: அசுரன்

அலெக்சாண்டர் யுவ்செங்கோ - இவர் 1986ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் வெடித்துச் சிதறிய செர்னோபில் அணுஉலையில் நான்காவது பிரிவில் பணியாற்றியவர். அங்கு அந்த இரவில் பணியாற்றியவர்களில் இன்னமும் எஞ்சியிருக்கும் சிலரில் இவரும் ஒருவர். கடும் தீக்காயமடந்த இவரைக் காப்பாற்ற பலமுறை அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றுவரை கதிர்வீச்சின் கோர தாண்டவத்தால் ஏற்பட்ட உடல்நலக்கேட்டுடனேயே அவர் வாழ்ந்துவருகிறார். 2004ஆம் ஆண்டு டிஸ்கவரி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பான ஒரு ஆவணப்படத்தில்தான் அவர் முதன்முதலாக தனது மௌனம் கலந்து பேசியுள்ளார். அந்த இரவில் என்ன நடந்தது என்பது குறித்து நியூ சயின்டிஸ்ட் இதழுக்காக மைக்கேல் பாண்ட்-டிடம் அவர் பேசியவை இவை.


நவதீண்டாமை: அ.முத்துக்கிருஷ்ணன்

சமீபத்தில் பெங்களூரிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரை அந்த நகரங்களில் மோகிக்கப்படுகிற கலாச்சாரத்தின் அவல நிலையை விவரித்தது. பெங்களூரிலுள்ள பல மென்பொருள் நிறுவனங்களின் வானுயர கட்டிடங்களின் கழிவு நீரேற்றக்குழாய்கள் தொடர்ந்து அடைத்துக் கொண்டே இருந்தது அவைகளின் காரணத்தை பொறியாளர்கள் கண்டறிந்த பொழுது ஆணுறைகளால் தினமும் அடைப்பட்டு போகிறது தெரியவந்தது. அதுவும் குறிப்பாக இரவு ஷிப்டில் அந்த கட்டிட வாசல்களில் இவர்கள் இதே நாடகங்களை அரகேற்றுவார்களா.


முகம் இருந்தும் முகவரி அற்றவர்கள்: ஆய்வுக்குழு, கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள்

ஈழத்தமிழ் அகதிகளுக்கும், திபெத்திய அகதிகளுக்கும் இந்திய நடுவன் அரசு செய்யும் சலுகைகளைப் பற்றியும், கொடுக்கும் சிறப்புகளைப் பற்றியும் எங்களுடைய குமுறல்களை மானமுள்ள தமிழர்கள் மத்தியில் ஒரு ஒப்பாய்வு செய்து வெளியிடுகிறோம். (மண்டபம் முகாமில் உள்ள ஊழியர்களின் கடுமையான நடவடிக்கை காரணமாக புகைப்படம் கூட எடுக்க முடியவில்லை. காரணம் புகைப்படத்தில் உள்ள வீடுகளையோ, முகங்களையோ கண்டுபிடித்து அவர்களை மனரீதியாகவோ மற்றும் உடல் ரீதியாகவோ துன்புறுத்துகின்றனர் காவல் துறையினர். எனவே நாங்கள் புகைப்படம் எடுக்க வில்லை). எனவே, நாங்கள் மற்ற முகாம்களில் உள்ள அவலங்களையும், திபெத்திய முகாமில் உள்ள நிலையினையும், புகைப்படங்களையும் ஆதாரமாக வைக்கின்றோம்.


மேலும் கட்டுரைகள், கவிதைகள் படிக்க, www.vizhippunarvu.com

எது பயங்கரவாதம்?: ந. முத்துமோகன்

புதிய காற்று செப்டம்பர் மாத இதழ்
www.puthiyakaatru.keetru.com

எது பயங்கரவாதம்?: ந. முத்துமோகன்

ஹிட்லரது பாசிசப் படைகள் நாடுகளை ஆக்கிரமித்த போது தேசபக்த எதிர்ப்பு இயக்கங்கள் பல அத்தகைய ரகசியக் குழுக்களாகவும் தற்கொலைப் படையினராகவும் போராடியிருக்கின்றன. இவர்கள் எல்லோருக்கும் இடையில் ஒரு பொதுப்பண்பு உண்டு. அது, அவர்கள் மிகப்பலமான, கொடூரமான ஓர் எதிரியோடு மிகப் பலவீனமான சூழல்களில் தாம் உயிர்ப்பலி ஆவோம் என அறிந்தே போராடினார்கள் என்பது. இப்போது அமெரிக்க பயங்கரவாதம் என முத்திரை குத்திவரும் பல கொரில்லாக் குழுக்கள் வரலாற்று ரீதியாக மத்திய கால ரகசியக் குழுக்களை ஒத்தவை. மத்தியகால கொடூரமான அரசுகள் ஏற்படுத்தியது போன்ற நெருக்கடிகளை அமெரிக்கா இன்றைய உலகில் ஏற்படுத்தி வருவதால், ரகசியக் குழுக்களும் தற்கொலைப் படைகளும் அதிகரித்து வருகின்றன.

பின் நவீனத்துவமும் இசையும்: எம். ஜி. சுரேஷ்

நவீன இசை பிரபஞ்சத்தின் யதார்த்தத்தை எடுத்துரைப்பது. பின் நவீனத்துவமோ கலை, இலக்கியம், இசை போன்றவை பிரபஞ்ச யதார்த்தத்தை எடுத்துரைத்தால் போதாது. அவற்றை கேள்விக் குள்ளாக்க வேண்டும் என்றது. நவீனதுவத்தின் கலை, இலக்கியம், இசை போன்றவை ஊடகங்களின் நொறுக்குத் தீனியாகவும், நுகர்வதற்குத் தயாரிக்கப் பட்ட பண்டங்களாகவும் வகைப்படுத்தப் பட்ட பதார்த்தங்களாகவுமே இருந்தன. பின் நவீனத்துவமோ கலை என்ற பெயரால் விளைவிக்கப்பட்டு நுகர் பொருட்களாக்கப்பட்ட அந்தப் பணியிடங்களை நுகருமாறு ஒரு சமூகத்தின் மேல் திணிக்கும் அவல நிலைமையை விமர்சிக்கிறது. கிண்டல் செய்கிறது.

துரோகிகளின் தேசம்: பா. செயப்பிரகாசம்

ஒரு செய்தி இதழ் அல்லது செய்தியாளர் தான் புலனாய்வு செய்து பெற்ற செய்திகளின் ஆதார மூலத்தை வெளிப்படுத்த தேவையில்லை என்பது இதழியல் கோட்பாடு. அந்தப் பண்பாட்டை அமெரிக்க உளவுதுறைகள் கேலி செய்கின்றன. எங்கிருந்து பெற்றாய் இச்செய்தியை. மூலத்தைச் சொல் என்கிறது அரசும் புலானாய்வு அமைப்பும். முதலில் புலனாய்வு செய்து அம்மாதிரியான செய்திகளைச் சேகரித்தல் கூடாது. அவை தேசபக்திச் செய்திகள். அரசாங்கத்திற்கு குறிப்பாக உளவுத் துறைகளுக்கு மட்டுமே சொந்தமானவை. இரண்டாவது சேகரித்ததை திறப்பாய் வெளியில் தெரிவிக்கக் கூடாது. ஒவ்வொரு முறையும் அரசின் ரகசியத் தகவல்கள் எனும் குண்டு வெடிக்கிறபோது அதிபர் புஷ்ஷும் துணை அதிபர் செனாவும் ஆளுங்கட்சியான குடியரசு கட்சியினரும் அரண்டு போகிறார்கள். “ஒவ்வொரு செய்தி கசிகிற போதும் எதிரிகள் (பங்கரவாதிகள்) தோற்கடிக்கப்படுவது தள்ளிப் போகிறது” என்கிறார் ஒரு தொலைக்காட்சியில் புஷ்.

சாதாசிவம் கமிஷன் அறிக்கையும் காலதாமதமாகும் நிவாரணமும்: ராஜசேகரன்

இன்றைக்கு வரைக்கும் குற்றமிழைத்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே போல் சிறப்பு அதிரடிப்படை கலைக்கப்படாமல் தர்மபுரி, மேட்டூர் போன்ற முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். வீரப்பனைத் தொடர்ந்து தமிழ்த் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் என்று கூறிக் கொண்டு தர்மபுரி காடுகளில் சோதனை மேற் கொள்ளப்படுவதும் அப்பகுதி மக்களை அச்சுறுத்துவதும் நடந்து கொண்டேயிருக்கிறது. இன்றைக்கு வரைக்கும் அரசுத் தரப்பிலிருந்து எந்த உதவியும் பாதிக்கப்பட்ட அந்த மக்களைச் சென்றடையவில்லை.

இதயத்தின் முகவரி சொன்னவர்: ந. மம்மது

ராக்பெல்லர் பவுண்டேசன் அவருக்கு அமெரிக்க குடியேற்றம் அளிக்க முன்வந்த போது, “என்னுடைய கங்கையையும் காசியையும் அமெரிக்காவுக்கு கொண்டு வர முடியுமா?” என்று கேட்டவர். மற்ற கலைஞர்களைப் போல புகழ் பெற்றதும் டெல்லி, பம்பாய் என்று அவர் குடியேறவில்லை. ஏன் மருத்துவத்திற்கு கூட பிஸ்மில்லா கான் காசியை விட்டுச் செல்லவில்லை. புகழ்பெற்ற வயலின் மேதை எல்.வைத்தியநாதன், தன்னுடைய குழுவினருக்காக பத்து விமானப் பயணச்சீட்டும், ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க ஏற்பாடு செய்ததையும் பிஸ்மில்லாகான் ஏற்க மறுத்துவிட்டார். அண்டை வீட்டுக்காரர் தகரக் கூரைக்கு தண்ணீர் ஊற்றி கோடையில் வெப்பம் தணித்து வாழும் போது, தன்னுடைய வீட்டை குளிர் வசதி செய்ய பிஸ்மில்லாகான் ஒப்புக் கொள்ளவில்லை.

மேலும் கட்டுரைகள், கவிதைகள் படிக்க, www.puthiyakaatru.keetru.com

அகதி வாழ்வு - ச.பாலமுருகன்

If you have problem in reading this mail in Tamil, Right click on mail and click Encoding >
Select Unicode (UTF-8)


புது விசை கலாச்சார காலாண்டிதழ்www.puthuvisai.com

அகதி வாழ்வு - ச.பாலமுருகன்

சீனாவிலிருந்து தலாய்லாமாவின் தலைமையில் வெளியேறிய திபெத்தியர்கள் நம் நாட்டில் ஒரு இலட்சம் பேர் அகதிகளாக உள்ளனர். இம்மக்களுக்கு சொந்த குடியிருப்பு மற்றும் ஆரோக்கியமான சூழலை தந்துள்ளது இந்திய அரசு. அந்த அகதிகள் குடியிருப்புகளுடன் ஒப்பிடும்போது நம் ஈழத் தமிழர்களின் குடியிருப்புகள் மிக கொடுமையானவை. முறையான கூரையில்லாத, கழிப்பறை வசதியற்ற எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகளை மாற்ற குரல் கொடுப்பது விடுதலைப்புலி ஆதரவு குரலல்ல என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள மறுக்கின்றன. அகதித் தமிழர்கள் வாக்களிக்கும் தகுதியில்லாதவர்களாக இருப்பதால்கூட அவர்களை கண்கொண்டு பார்க்க பெரும்பான்மையான கட்சிகள் மறுக்கலாம்.

பண்டித அயோத்திதாசரும், கிறித்தவமும்: ஆ.சிவசுப்பிரமணியன்

"கிறித்தவ சமயப் பரப்பாளர்களின் அலட்சிப் போக்கு, அதிகாரமின்மை, அக்கறை இன்மை ஆகியவையும் சேர்ந்து, கிறித்தவர்களாக ஆவதற்கு முன்பு நாங்கள் எந்நிலையில் இருந்தோமோ அதே நிலையில்தான் இன்றும் எங்களை வைத்துள்ளன. அதாவது தீண்டப்படாதவர்களாக, நாட்டில் நிலவும் சமுதாயக் சட்டங்களால் கேவலமான முறையில் நடத்தப்படுபவர்களாக, சாதிக் கிறித்தவர்களால் நிராகரிக்கப்பட்டவர்களாக, சாதி இந்துக்களால் வெறுக்கப்படுபவர்களாக, எங்களது சொந்த இந்துமதத் தாழ்த்தப்பட்ட சகோதரர்களால் ஒதுக்கப்பட்டவர்களாக இருந்து வருகிறோம்."

தலித்துகளிடையே ஏகாதிபத்திய-எதிர்ப்பு உணர்வு
ஆனந்த் டெல்டும்ப்டே / தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை


மற்றவர்களின் துன்பதுயரங்கள் தலித்துகளின் மனத்தை உறுத்துவதேயில்லையா? தங்களைச் சுற்றிலும் நடக்கும் அநீதிகளைக் காண விரும்பாத அளவிற்கு அவர்கள் வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டவர்களாக இருக்கிறார்களா? ஒரு விஷயம் தங்களைப் பாதிக்கும்வரை, அதற்கு எதிராகச் செயல் படாமல் இருக்கும் அளவிற்கு அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்களா? இக்கேள்விகளுக்கான எளிமைப்படுத்தப்பட்ட பதிலைத் தரமுடியாது. இவற்றுக்குப் பதில் காண, அவர்களது உணர்வை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். அது எப்படி உருவாகியது என்பதைப் பார்க்க வேண்டும். காலங் காலமாகத் தாங்கள் எப்படி இருந்து வந்தார்களோ அவ்வாறேதான் இப்போதும் இருப்பதாக தலித்துகள் கருதுகிறார்கள்: இந்த நாட்டில் நண்பர்கள் இல்லாதவர்களாக; தங்களது துன்பதுயரங்களைப் பகிர்ந்து கொள்கிறவர்கள் இல்லாதவர்களாக.


கங்கைச் சமவெளி ஆரியர் சமுதாயம்: பேரா. கே.ஏ.மணிக்குமார்

உபநிடத காலத்தின் தலைசிறந்த தத்துவஞானி யாக்ஞவல்கியருக்கு மாட்டிறைச்சி மிகவும் பிடித்தமானது என சமகால நூல்கள் தெரிவிக்கின்றன. பின்வேத இலக்கியங்களில் காணக்கிடக்கும் “கோக்னா” எனும் சமஸ்கிருத வார்த்தை விருந்தினரைக் குறிக்கும். இவ்விருந்தினருக்கு எருது (OX) வெட்டப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கருத்தரிக்காத பசுக்களை துறவிகளாய் அலைந்த பிராமணர்களுக்கு மக்கள் அன்று வழங்கியதாக அதர்வ வேதம் கூறுகிறது. முதலில் மாமிசத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட கால்நடைகள் பின்னர் தோலுக்காகவும் பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களுக்காகவும், பயிர் உரத்திற்காகவும், போக்குவரத்திற்காகவும் நிலத்தை உழுவதற்காகவும் பயன்படுத்தப்பட்ட போது அவற்றை பலியிடுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.

சமதர்மமும் வகுப்புரிமையும்: வ.கீதா

வகுப்புரிமை என்பதன் முழுப்பொருளையும் சமுதாய பயன்பாட்டுக்குரிய வகையில் புரிந்துணர்ந்து விளக்கி, விவாதித்து, காரியத்திலும் அதை காட்டிய பெரியாரைப் போலும், சுயமரியாதை இயக்கத்தைப் போலும் வெகு மக்கள் இயக்கமும் தலைமையும் தொடர்ந்து வாய்க்கப்பெறாத, கட்டியெழுப்பப்படாத நிலையில் வகுப்புரிமையின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? சமதர்மம் என்ற அறத்தின் அடிப்படையில் அல்லாமல் வெறும் கணக்குரீதியாக மட்டுமே வகுப்புரிமையை அணுகுவதென்பது பெரியார் சாதிக்க நினைத்த முழுப்புரட்சி, அதன் தேவை பற்றிய ஒருவித மறதிக்கு நம்மை இட்டுச் சென்றுவிடுமோ?


மேலும் கட்டுரைகள், கவிதைகள் படிக்க..

ஏதாவது செய் ஏதாவது செய்

அணி இரு மாத இதழ்www.ani.keetru.com


அம்ரிதா ப்ரிதம் கவிதைகள்


நேற்று இரவு
யாரைக் கொன்றதாக
நினைத்திருக்கிறேனோ
அவளைக் கண்டேன்

ஓ ! கடவுளே !
உனது படுக்கையில்

காலைப் பறவைகளின் கலந்திசை: அன்பாதவன்

90களில் எழுந்த தலித் எழுச்சிப் பேரலைக்குப் பின் தலித் வாழ்வியலின் வழக்கமான வார்த்தைகளான பறையன், பள்ளன், சக்கிலியன், வெட்டியான், தோட்டி போன்றவை வழக்கொழிந்து வீரமும், விஞ்ஞானமும், சமூகவியல் பார்வையும் கொண்ட புதிய சொல்லாடல்கள் பயன்படுத்தப் படுகின்றன. வெட்டியான் என்ற சொல் இன்றைக்கு மயானத் தொழிலாளியாக மாறிவிட்டது (வாழ்நிலை மாறவில்லை என்பது தனி விஷயம்) எனவே விஜயனைப் போன்ற மனிதம் நிரம்பிய கவிஞர்கள் சமூகவியல் மாற்றங்களையும் கவனத்தில் கொண்டு படைப்புகள் உருவாக்குவது நல்லது.

புதையல்: ஆத்மாநாம்

ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத் தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும் வீர்யமிழ்ந்தவன் என்றும்
குத்திக்காட்டும்


அறிந்த கேள்விகள் - அறியாத பதில்கள்: விழி. பா. இதயவேந்தன்


கேள்விகளும் பதில்களும்
நிறையவே உள்ளன.

தெரியவில்லை என்றாலும் பலவற்றைத்
தேடிக் கொண்டிருக்கிறோம் இன்னும்
சமூகத்தில் நானும் நீங்களும்

உலகக் கவிஞர்கள் வரிசை: மைக்கேல் கோப்

மைக்கேல் கோப்பின் கவிதைகளில் உருவம், மனிதர்கள் மற்றும் பல்வேறு கதைகள் வெளிப்படுகிறது. இவரது கவிதை நிகழ்ச்சிகள் பெரிய கொண்டாட்டமாக கருதப்படுகிறது. உலக வாழ்வின் நுண்நொடிக் கழிதலை அவர் கவிதையுள் மிகச் சிறப்பாய் சிறை செய்கிறார் என வர்ணைக்கு உட்படுகிறது அவரும் அவரது கவிதையும், உலகமயமாதல் மற்றும் பொருளாதாரம் அமைப்பியல் குறித்த விமர்சனங்களை தனது படைப்புகளில் பதிவு செய்து உள்ளார். மைக்கேல் கோப்பின் கவிதைகள் ஊடாக சுற்றுச்சூழல், சமூக மற்று மதரீதியான தளங்களையும் பலவகை மக்களின் குரல்களையும் இனங்களின் எண்ணப் பதிவுகளையும் ஒருவரால் கண்டு உணர முடியும்.


மேலும் கட்டுரைகள், கவிதைகள் படிக்க, www.ani.keetru.com

தலித் முரசு மாத இதழ்

தலித் முரசு மாத இதழ்
www.dalithmurasu.com

தென்திசையில் பூக்கும் புதியதொரு கியூபா: பூங்குழலி

தங்களது போராட்ட வரலாற்றில் தொடக்கம் முதல் இன்று வரை, விடுதலைப் புலிகள், சிங்களப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகவோ, அப்பாவி சிங்கள மக்களைக் கொன்றதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. அவர்கள் நடத்துவது ஒரு தற்காப்புப் போர் மட்டுமே. தங்கள் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து, தங்கள் மக்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையிலேயே அவர்கள் ஈடுபடுகின்றனர். அவ்வாறான ஒரு போராட்டத்தின் விளைவாக, தங்கள் மண்ணின் பெரும் பகுதிகளை அவர்கள் மீட்டெடுத்து இருக்கின்றனர்.

பழங்குடியினர் இனி காடுகளில் வாழ முடியாது: மகாஸ்வேதா தேவி

பழங்குடியினருக்கு உண்மையிலேயே காடுகள் மீது ஏதேனும் உரிமை இருக்கிறதா? நாம் இந்தியாவில் ஓர் இயற்கை காட்டுப்பகுதியை தேர்ந்தெடுத்து பழங்குடியினரிடம் ஒப்படைத்து, அவர்களை அதைக் கொண்டு வாழச் சொன்னால், இன்றைய பழங்குடியினரால் முடியும் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவர்கள் வாழ்க்கை முறை அழிந்துவிட்டது. இப்போது அவர்கள் அறிந்ததெல்லாம் பழமொழிகள் மற்றும் சடங்குகள் மூலம் அறிந்து கொண்ட வெறும் வாய்மொழி மரபு மட்டுமே. பல தலைமுறைகளாகத் தொடர்ந்த காடுகள் அழிப்புக்குப் பிறகு, காடுகளையோ மரங்களையோ பார்த்திராதவர்கள் காடுகளை வைத்து வாழ முடியும் என எதிர்பார்க்க முடியாது.

ஜாதியமே இந்தியாவின் தேசியப் பிரச்சினை! - அழகிய பெரியவன்

தமிழகத்தில் மட்டுமல்ல, சாதியம் இந்தியாவின் தேசியப் பிரச்சினையாகவே எப்போதும் இருந்து வருகிறது. இந்தியர்கள் இந்தியன் என்ற உணர்வுடனோ, மாநில உணர்வுடனோ இருக்கிறார்களோ இல்லையோ; ஆனால், கண்டிப்பாக சாதிய உணர்வுடன் இருக்கிறார்கள். சில பகுதிகளில் சாதியின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டிருந்தாலும் கூட, சாதியின் உணர்வு அடியோடு ஒழிக்கப்படவில்லை. அந்த உணர்வு நீருபூத்த நெருப்புத்துண்டென உறைந்து கிடக்கிறது. சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும் அந்நெருப்பை தீப்பிடிக்கச் செய்கின்றன.

அமெரிக்கா + இஸ்ரேல் = உலக பயங்கரவாதம்: எஸ்.வி. ராஜதுரை

அய்.நா. அவை, பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதை 33 நாடுகள் ஆதரித்தன; 13 நாடுகள் எதிர்த்தன; 10 நாடுகள் நடுநிலை வகித்தன. எதிர்த்து வாக்களித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், ஆயுதமேந்திய ஜியோனிசக் குழுக்கள் அதிரடியாகப் பெரு நகரங்களையும் சிறு நகரங்களையும் கைப்பற்றிக் கொண்டு, பாலஸ்தீன அரேபியர்களைக் கூண்டோடு வெளியேற்றத் தொடங்கின. அண்டையிலுள்ள அரபு நாட்டுப் படைகள் தாக்குதல் தொடுக்க ஆயத்தம் செய்து வருவதாலேயே தாங்கள் அவ்வாறு செய்வதாகப் புளுகின.

தீண்டாமை டுடே

இந்தியா டுடே தொடக்கத்திலிருந்தே பார்ப்பன ஆதரவுப் போக்கை வெளிப்படையாகப் பின்பற்றி வந்துள்ளது. அது, பா.ஜ.க.வின் பினாமி இதழ் என்பதே உண்மை. அதன் ஆசிரியராக ஒரு பார்ப்பனர் அல்லாதவர் வந்தாலும், அதன் செய்தியாளர்களில் ஒருவர் முஸ்லிமாக இருந்தாலும், அவர்களும் பார்ப்பனியக் கருத்தியலைத்தான் பின்பற்றுகிறார்கள் என்பதையே இந்தியா டுடே கட்டுரை, மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.


மேலும் கட்டுரைகள், கவிதைகள் படிக்க,
www.dalithmurasu.com

குதிரைவீரன் பயணம் காலாண்டிதழ்

If you have problem in reading this mail in Tamil, Right click on mail and click Encoding >
Select Unicode (UTF-8)


குதிரைவீரன் பயணம் காலாண்டிதழ்
www.kuthiraiveeran.keetru.com

விக்ரமாதித்யன் கவிதைகள்: சுகுமாரன்

நவீன கவிதை கலாச்சார அடையாளங்களைத் துறந்து மரங்களையோ நதியையோ இடத்தையோ வருணிக்கும்போது விக்ரமாதித்யன் அவற்றின் பிரத்தியேகத்தன்மையுடனேயே பேச விரும்புகிறார். குற்றால அருவியும் தென்காசியும் திருப்புன்கூரும் பிறவும் அவற்றின் கலாச்சாரப் பின்னணி விலகாமல் கவிதைக்குள் வருகின்றன. நவீன சாதனங்களும்கூட அவரது இந்தப் போக்கில் பிரத்தியேகத் தன்மை தொலையாமல்தான் இடம்பெறுகின்றன. வட்டப்பானைக் கடையில் மார்கோ சோப் கேட்டால் ஹமாம் எடுத்துக் கொடுப்பார் என்று வரும் வரிகள் இதற்கு உதாரணம்.

அந்தரக் கயிறு: பெருமாள் முருகன்

கண்களை மூடுவதற்கே பயமாக இருந்தது. தூங்கச்செல்வதே பீதியூட்டும் காரியமாயிற்று. மனதை எத்தனை கட்டாயப்படுத்தி வேறெதிலாவது குவிக்க முயன்றாலும் கொஞ்சநேரம்தான். ஆழ்மனம் திட்டமிட்டுக் கட்டும் கற்பனையா எந்தச் சம்பந்தமும் இன்றி எங்கிருந்தோ வந்து பரவும் கனவா என்பதை அவனால் தெளிவாக உணர முடியவில்லை. சிலசமயம் எல்லாமே உண்மை போலவே தோன்றிற்று. தொடக்கத்தில் மனதுக்கு ரொம்பவும் திருப்திகரமானசெயலாக இருந்தது அது. தன்னைப் பற்றிய பிம்பங்கள் கட்டி எழும்புவதை மனதாரநேசித்தான். அதன் விரிவு இப்படிப் போகும் என்று கருதவில்லை.

வெண்மணி - பெரியாரின் எதிர்வினை: செல்வம்

வருணாசிரமத்தையும் பார்ப்பனீயத்தையும் பத்திரப்படுத்திவிட்டு எப்படிப்பட்ட பொதுவுடையை ஏற்படுத்திவிட்டாலும், திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பானிடம் தானாகவே வந்துவிடும் என்றும் சாதி இருக்கிறவரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும் பார்ப்பனர்களுக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு முன்போலவே நடைபெறும் என்றும் தைரியம் கொள்ளச்செய்யும்... (குடிஅரசு 25.3.1934). அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொதுவுடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாகம் ஏற்படுகிறதென்ற பெரியாரின் அவதானிப்பு காலம்கடந்தே நமக்கு உறைக்கிறது.

உழவின் திசைவழி மரபிலிருந்து நவீனம் நோக்கியதா?: அ. முத்துக்கிருஷ்ணன்

கிராமங்களை அழிக்கும் வரலாற்று சதி தான் பசுமை புரட்சி. யூரியா, பொட்டாஸ், அமோனியா, பூச்சிக் கொல்லிகள் என இந்த அபாய விஷக் கூட்டணி நம் மண்ணின் தன்மையை உருமாற்றி அதன் எல்லா வளங்களையும் அழித்தது. விவாசாயியின் நண்பன் மண்புழு என்று தவறாது பாடங்களில் இடம் பெற்ற அந்த ஜீவன் இயற்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிவுக்கு சென்றது. மண்புழு மண்ணை அழகாய் கோதுவது மட்டுமின்றி அதன் எச்சம் உலகின் எந்த உரத்திற்கும் ஒப்பில்லை. எத்திசையிலும் உயிரற்ற நிலம் பரவிக்கிடந்தது. மண் நிர்மூலமாக்கப்பட்டது.

விஸ்வநாததாஸ்: முத்தையா வெள்ளையன்

சாதீய ரீதியாக சில ஆண்களும், அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் மருத்துவ தொழிலைச் செய்து வந்தனர். மக்களுக்கு வந்த சிறு வியாதிகள் முதல் பெரு வியாதிகள் வரை, மகப்பேறு போன்ற மருத்துவத்தை அவர்கள் செய்து வந்தனர். ஆனால் இவர்களை சமூகம் தீண்டபடாதவர்களாக ஒதுக்கிவைத்தது. அதே நேரம் மற்ற பட்டியல் சாதிகளை போல் இவர்கள் முற்றிலுமாக ஒதுக்க முடியாதவர்களாகவே இருந்தனர். முன்பு மருத்துவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் காலனித்துவ ஆட்சிக்குப் பின் நாவிதர்கள் என்று அழைக்கப்பட்டனர். வைத்தியம் என்ற தொழிலை விட்டு அந்த சமூகம் பின்னோக்கி பயணிக்கிறது. இது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயம்.


மேலும் கட்டுரைகள், கவிதைகள் படிக்க, www.kuthiraiveeran.keetru.com

தாகம் மாத இதழ்

If you have problem in reading this mail in Tamil, Right click on mail and click Encoding >
Select Unicode (UTF-8)


தாகம் மாத இதழ்
www.thaagam.keetru.com

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை: தமிழ்

உலகெங்கும் பல நாடுகளில் அரசுகளுக்கு எதிரான புரட்சிகள் வெவ்வேறு வடிவங்களில் நடைபெற்று வருகின்றன. நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் கிளர்ச்சி செய்தார்கள். ஆயுதம் தாங்கும் மாவோயிஸ்ட்டுகளை இந்திய அரசு ஏற்கவில்லை. அதற்காக நேபாள மக்களின் நலனை புறந்தள்ளிவிட்டதா? பாலஸ்தீனத்தில் ஹமாசின் கை ஓங்குவதில் இந்தியாவுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதற்காக பாலஸ்தீன விடுதலையை இந்தியா புறந்தள்ளிவிடுமா? மற்ற நாடுகளின் மீதெல்லாம் பரிவுப் பார்வைக் காட்டும் இந்தியா, தன் காலடியில் உள்ள ஈழத்தை மட்டும் வஞ்சிப்பது ஏன்?

புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட வரலாறு: கோவி. லெனின்

முதல் இந்திய சுதந்திரப் போருக்கு முன்னதாகவே தமிழக மன்னர்களான பூலித்தேவன், வீரன் அழகுமுத்து, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, ராணி வேலு நாச்சியார் ஆகியோர் வெள்ளையர்களுக்கு எதிராக வாளேந்தி மடிந்த வரலாறு, வடதிசை நோக்கிப் பயணிக்கவில்லை. தங்கள் பகுதிக்குள் இந்த வரலாறு பயணிக்காதபடி பார்த்துக் கொள்வதில் தேசியத் தலைவர்கள் கவனமாகவே இருந்திருக்கிறார்கள்!

தீட்டுக் கடவுளும் தீண்டிய நடிகையும்: பிரதீபன்

பெண்கள் எங்கள் கோயிலுக்கு தாராளமாக வரலாம். அவர்களே கருவறைக்கு வந்து சாமியைத் தொட்டுக் கழுவலாம். அலங்காரம் செய்யலாம். பூசையும் செய்யலாம் என்றதுடன், மிக முக்கியமாக மேல்மருவத்தூர் நிர்வாகம் சொன்னது என்ன தெரியுமா? மாதவிலக்கு என்பது இயற்கையானது. அதனால், மாதவிலக்கான பெண்கள் கோயிலுக்கு வரக்கூடாது என்று நாங்கள் தடுக்கப் போவதில்லை. அந்தப் பெண்களும் கோயிலுக்கு வரலாம் என்பதுதான். ஒரு மாநிலத் தலைநகருக்குச் செல்லும் சாலையையொட்டிய ஊரில் அமைந்துள்ள கோயில் என்பதால் காலத்திற்கேற்ற மாற்றங்களைப் பெற்றிருக்கிறது மேல்மருவத்தூர். ஆனால், காட்டுப் பாதையைக் கடந்து மலைப் பகுதியில் அமைந்துள்ள அய்யப்பன் கோயிலிலோ பெண்கள் வந்தார்கள் என்பது சர்ச்சைக்குரியதாக மாறுகிறது.

தமிழர் தலைவர்: சாமி. சிதம்பரனார்

ஈரோட்டில் 1920ஆம் ஆண்டு வரையிலும் ஈ.வெ.ரா.வின் தொடர்பில்லாத பொது நிலையங்களேயில்லை. பொதுக் காரியங்களும் இருந்ததில்லை. இவரை நகரத் தலைவராக மக்கள் தேர்ந்தெடுத்தபோது இவர் அப்பதவிக்கு இலாயக்கில்லை யென்றும், இஷ்டம் போல் பொறுப்பில்லாமல் திரிகிறவர் என்றும் அங்குள்ள பார்ப்பனர்களுடைய தூண்டுதலால் கலெக்டருக்குச் சிலர் ஆட்சேபனை மனுப் போட்டார்கள். அங்குள்ள கிறித்தவப் பாதிரிமார்கள் முயற்சிக்கு இவர் விரோதமாக இருந்து வந்ததால், அவர்கள் பள்ளிக்கூடங்களை நடக்கவிடாமல் செய்ததால் இரண்டொரு பாதிரிமார்களும் இதற்கு உடந்தையாயிருந்தார்கள். எனவே, கலெக்டர் அவ்விதமே இவர் தகுதியில்லை என்று எழுதிவிட்டார்.

இரண்டாம் சுதந்திரப் போர்: ஆசிரியர் கி.வீரமணி

இன்றைக்கு உள்ள நிலவரப்படி பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 80 சதவிகிதமாகும். பிற்படுத்தப்பட்டோர் 36 சதவிகிதமாம்! அதுவும் 36 சதவிகிதப் பிற்படுத்தப்பட்டோரில் முஸ்லீம்களைக் கழித்து விட்டால் 31 சதவிகிதம் பேர்கள்தான் இருக்கிறார்கள் என்று முழுப் பூசணிக்காயைப் படி சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்கள். எனவே, நாம் விழிப்போடு இருக்கவேண்டும். இது இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்கான போர்ப் பிரகடன ஆரம்பம் என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.


மேலும் கட்டுரைகள், கவிதைகள் படிக்க, www.thaagam.keetru.com

புதுமைப்பித்தன் பற்றி: தி.க.சி.

If you have problem in reading this mail in Tamil, Right click on mail and click Encoding >
Select Unicode (UTF-8)


கதைசொல்லி மே - ஆகஸ்ட் 2006 இதழ்
www.kathaisolli.keetru.com

கி.ராஜநாராயணன் பக்கங்கள்

மழை பெய்த மூணாம் நாள் காட்டை (தனது கரிசல்ப் புஞ்சையை) சுத்திப்பார்க்கப் போனார் பாறைப்பட்டி நாயக்கர். திரும்புகிற போது ஒத்தையடிப்பாதை வழிவந்தார். கம்மம்பயிர் ரெண்டுபக்கமும் தலைக்கு மேலெ வளந்திருக்கு. செங்கமங்கலான நேரம். பயம் வந்துட்டது ; காரணம். குதவளையைப் பிடிச்சி நெருக்குனா எப்பிடி சத்தங்க கொடுப்பாங்களோ அதுபோல ஒரு சத்தம்! முதல்ல எட்டி நடையைப் போட்டவரு வேகம் எடுத்து ஓட ஆரம்பிச்சாராம். கால்ல செருப்பு போட்டிருந்ததுனால வெரசா ஓடமுடியவில்லைன்னாலும் எப்படியாவது தப்பிச்சிறனுன்னும் ஓட ஆரம்பிச்ச போதுதான் பிடதியில மண்ணு உருண்டயால யாரோ வீசி அடிக்கிறாங்களாம்! வேகமா ஓட ஓட மண்கட்டிஅடி வேகமா வந்து விழுதுதாம்.

புதுமைப்பித்தன் பற்றி: தி.க.சி.

திருநெல்வேலி இந்துக் கல்லூரிக்கு ஒரு முறை புதுமைப்பித்தனை பேசுவதற்கு அழைத்திருந்தார்கள். நானும் என் கதைகளும் என்ற தலைப்பில் பேசினார் புதுமைப்பித்தன். மேடைப் பேச்சாளர்கள் போன்று மேடையில் மைக்கின் முன்னால் நின்று கொண்டு பேசாமல் ஒரு நாடக நடிகனைப் போல, மேடையின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கும், மறுமுனையில் இருந்து இன்னொரு முனைக்கும் நடந்து கொண்டே பேசியது இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

மருளாடி: எஸ். இலட்சுமணப்பெருமாள்

அவன் அப்பதான் கையில தீட்டுன அருவாளோட கம்மாக்கரை தாண்டி விரசலா வந்துக்கிட்டிருந்தான். ஓடிப் போய் அவனை மறிச்சி, ‘இந்தா பாரு மனுசா இன்னயிலிருந்து வீட்டுப்பக்கம் வந்துராதே. என் வீட்டுக்காரரு வந்துட்டாரு’ அப்படீன்னா. பசியின்னா பசி அவனுக்கு அகோரப்பசி, வந்த ஆத்திரத்துல அவனுக்கு கோபம் அண்டகாரம் முட்டிப்போயி, ‘சிரிக்குபிள்ளே ஒஞ்செளரியத்துக்கு நாவேணும்னா வரணும். வராதேன்னா திரும்பி போயிறணுமோ. என்னையென்ன பொண்டுக சட்டிப்பயன்னு நெனச்சியாடி, அப்படீன்னு அவ தல மயிரை இழுத்துப் பிடிச்சி கொண்டைய அறுத்து விட்டுட்டான்.

ஜாலியா ஒரு கதை!: வல்லிக்கண்ணன்

கிராமங்களிலே கதைகள் பேசினாலும் சரி, சும்மா வெறும் பேச்சு பேசினாலும் சரி, அவர்கள் பச்சையாகவும் கொச்சையாகவும் பேசத் தயங்கியதில்லை. எதையும் அசிங்கம், ஆபாசம்னு சாதாரண ஜனங்க கருதலே. எல்லாத்தையும் வெளிப்படையாப் பேசினாங்க. அனைத்துமே இயல்பானது, இயற்கையின்னு அவங்க நினைச்சாங்க. ஜாலி பிரதர் சொன்ன கதையிலே விரசம்னு சொல்லக்கூடிய சமாச்சாரம் உண்டு. இதை எல்லாமா வெளிப்படையாய் பேசுவாங்க என்று முகம் சுளிக்கக் கூடியவர்களும் இருப்பார்கள். பேச்சுக்குப் பொருள் உலகத்திலே உள்ள எல்லாம் தான் என்பதுதான் சாதாரண மக்களின் எண்ணம் ஆகும்.

ஒடுக்கப்பட்ட உடம்பின் குரலும் சங்க இலக்கியப் பெண் கவிஞர்களும்: பேரா. க. பஞ்சாங்கம்

ஆண்நலம் சார்ந்த சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் பெண்ணின் உடலை அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு கொண்டவை எனப்புனைந்து குறிப்பிட்ட ஒழுக்கத்திற்குள் கொண்டு வர முயல்வதை ஒருவர் எளிதாக உணர்ந்து கொள்ளலாம். உயிரை விட நாணம் சிறந்தது என்பது சங்க இலக்கிய மரபு. ஆனால் பெண்பாற் புலவர்களின் பாடல்களில் இந்த ஒழுக்கத்திற்கு எதிரான மீறல்கள் பதிவாகியுள்ளன. உடலை எழுதுதல் என்பதை நோக்கி நகரும் போது, காவல், கட்டு, விதி, வழக்கு, சாத்திரம் என்ற அதிகாரச் செயல்பாடுகள் காணாமல் போவதைப் பார்க்க முடிகிறது.


மேலும் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் படிக்க, www.kathaisolli.keetru.com

நுகர்வு எனும் மாயவலை - அ.முத்துக்கிருஷ்ணன்

If you have problem in reading this mail in Tamil, Right click on mail and click Encoding >
Select Unicode (UTF-8)


புதிய காற்று ஆகஸ்ட் 2006 இதழ்
www.puthiyakaatru.keetru.com

கவிஞர்.மு.மேத்தா நேர்காணல்
ஹாமீம் முஸ்தபா

இன்றைக்குத் திரைப் பாடல்களுடைய சூழல்கள் மாறி இருக்கின்றன. பாடலாசிரியனுக்கும் ஒரு பொறுப்பு உண்டு என்பது என்னைப் போன்றவர்களுடைய கருத்து. அந்த பொறுப்பை நிறைவேற்ற முடியாதபோது பாடல் எழுதுவதைவிட சும்மா இருப்பது சுகம் என்று கருதுகிறவன் நான். எல்லாவற்றோடும் சமரசம் செய்து கொள்ள முடியாது. இறங்கி வருவதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் கீழே விழுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. கீழே விழுவதுதான் ஆகாயத்தில் மிதப்பது என்று கருதுகிற உலகத்தில் எங்களுக்கு சம்பந்தமில்லை. நாங்கள் சுடுகாட்டில் கூவுகிற குயில்களல்ல. எங்களுடைய வனாந்தரம் வேறு.

நுகர்வு எனும் மாயவலை - அ.முத்துக்கிருஷ்ணன்

அதிவேக ஜெட் விமானங்களை நம் நாட்டிலும் வாங்க வேண்டும். பல உலக நாடுகளில் அந்த விமானங்கள் வந்து விட்டன என்கிறார்கள். நாம் பின் தங்கியிருக்கிறோம் என்று நம் மனங்களில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்க போதாக்குறைக்கு மீடியாக்கள் வேறு. இந்த ஜெட் விமானங்களால் என்ன பயன்? ஜெட் விமானங்களை யார் பயன்படுத்தியிருக்கிறார்கள்? சினிமா நடிகர்கள், பாடகர்கள், அரசியல்வாதிகள், பன்னாட்டு நிறுவன உயர் அதிகாரிகள். தொடர்ந்து சிலரின் பிரச்சனையை நாட்டின் பிரச்சனையாக்கப் பார்க்கிறார்கள், மாற்றுகிறார்கள்.

லெபனானில் மீண்டும் போர்: ந.முத்து மோகன்

சர்வதேச அரசியலின் ஒரு பிரச்சனையாக இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை இருந்த காலம் போய் இப்போது உலகப் பிரச்சனைகள் அத்தனைக்கும் இஸ்ரேலிய அணுகுமுறையே முன்மொழியப்படுகிறது. அமெரிக்க ஆப்கானிஸ்தானில் ஈராக்கில் ஒருதலைபட்ச தாக்குதலில் ஈடுபட்டது. அமெரிக்கா சொல்லும் நாகரீகங்களின் மோதல் என்பது இஸ்ரேல் முன்பே நடத்திக் கொண்டிருக்கும் யூத-இஸ்லாமிய மதங்களுக்கு இடையிலான யுத்தத்தின் தொடர்ச்சிதான். பயங்கரவாதத்திற்கு எதிராக ஜார்ஜ் புஷ் நடத்தும் யுத்தம் இஸ்ரேல் பாலஸ்தீன விடுதலைப் போராளிகளுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் எதிராக நீண்டகாலமாக நடத்திக் கொண்டிருக்கும் அதேவகை யுத்தம் தான்.

கானல் நீராகும் வாக்குறுதிகள்: ராஜசேகரன்

சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்! எனத் தேர்தல் அறிக்கையிலே திமுக தெரிவித்தருந்தது. இந்நேரத்தில் முதல்வரிடம் இளைஞர்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! சொன்னதை கட்டாயம் செய்யுங்கள் என்பது தான் அது. மீனைப் பிடித்துக் கொடுப்பதைவிட மீனைப் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது தமிழக அரசின் தற்போதைய கட்டாயக் கடமை. அதை முதல்வர் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம்.

சுதந்திரத்தின் வழி பெளத்தம்: ஸ்டாலின் ராசாங்கம்

அம்பேத்கர் பௌத்தத்தை நோக்கி ஏன் சென்றார் என்னும் கேள்வியைப் பற்றி அவர் இப்படிச் சொன்னார்: “இந்தியாவில் தீண்டத்தகாதார் என அறியப்படும் சமூகத்தில் பிறந்த காரணத்தினால் தான்” என்று. மதம் என்னும் வழமையான அர்த்தத்தில் அவர் மதம் ஒன்றை சிபாரிசு செய்யவில்லை. மதம் குறித்த வரையறையை விட மதத்தினால் ஆளப்படும் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். சமுதாய அமைப்பைக் கட்டிக் காக்கும் இந்த நடத்தை முறைகளை வைத்தே அவர் இந்து மதத்தை நிராகரித்ததும் பௌத்தத்தை மறுஉயிர்ப்பு செய்ததும் நடந்தது.


மேலும் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் படிக்க, www.puthiyakaatru.keetru.com

அமெரிக்கா + இஸ்ரேல் = உலக பயங்கரவாதம்

தலித் முரசு ஆகஸ்ட் 2006 இதழ்

www.dalithmurasu.com<
அமெரிக்கா + இஸ்ரேல் = உலக பயங்கரவாதம்

எஸ்.வி. ராஜதுரை
யூதர்களிடையேயும் வர்க்க வேறுபாடுகள் ஏன், சாதி போன்ற வேறுபாடுகளும்கூட உள்ளன. ஆனால், இந்த வர்க்க வேறுபாடுகளைக் கடந்து எல்லா யூதர்களும் உலகளவிலேயே ஒரு யூத தேசமாக அமைகிறார்கள் என்று ஜியோனிசம் கூறுகிறது. தான் உலகம் முழுவதிலுள்ள யூத மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்துவதாகவும், இது உலகிலுள்ள பிற நாடுகள் அனைத்திற்கும் பொதுவாக உள்ள யூத விரோதக் கொள்கையை எதிர்த்துப் போராடுவதாகவும் கூறுகிறது.எழுத்தாளர்களுக்கு குடும்பம் தடையாக இருக்க முடியாது - அழகிய பெரியவன்குடும்பம் என்கிற நிறுவனம் சிதைக்கப்பட வேண்டும் என்கிற கருத்தில் என்னிடம் குழப்பமான பதில்களே இருக்கின்றன. சமூகம் என்கிற பெரிய நிறுவனம் மாற்றப்படாத வரை, குடும்பம் என்கிற சிறு அலகுகளின் தேவை இருக்கவே செய்கிறது. அடிமைத்தனம், ஆண் ஆதிக்கம், அதிகாரம், சாதிய மனோபாவம் என்கிற கட்டமைப்புகளைக் கொண்ட குடும்ப அலகிலிருந்து ஒருவன் விடுதலை பெறும் பட்சத்தில், அவனுக்கான புகலிடமாக பரந்த சமூகமே இருக்கிறது. அந்தச் சமூகம் அவனுக்கான உகந்த வெளியாக அமையாத போது வாழ்க்கையில் நெருக்கடிகளும், உளவியல் சிக்கல்களும் உண்டாகின்றன.அணுவின் மடியில் உலகின் அமைதி: அ. முத்துக்கிருஷ்ணன்ஆயுத வியாபாரிகள் தயாரித்து குவித்து வைத்துள்ள ஆயுதங்களைப் பரிசோதிக்கவும், அழிக்கவும் போர்கள் அவர்களுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. இந்தப் போர்களை தேவையான நேரத்தில் நிகழ்த்தி, ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கவும், தனது வங்கிக் கணக்கைப் பெருக்கவும் தவறியதில்லை ஜார்ஜ் புஷ். இவர் அதிபராக ஆவதற்கு முன்னால் போர் ஆயுத நிறுவனத்தை நடத்தி வந்தவர். இவரது தந்தை அதிபராக இருந்த காலத்தில்தான் வளைகுடாப் போர் நடந்து ஈராக் அழித்தொழிக்கப்பட்டது. அந்த நேரம் வளைகுடா நாடுகள் எல்லாவற்றிலும் பீதியைக் கிளப்பிவிட்டு, எல்லா நாடுகளையும் ஆயுதங்களை வாங்கி குவிக்க வைத்தவர், ஆயுத வியாபாரி ஜார்ஜ் புஷ்.ஒரு தேசியப் பொய்! – யாக்கன்ஒடுக்கப்பட்ட இனங்களின் பாதுகாப்பிற்கும், மேம்பாட்டிற்கும் ஒரு தேசம் காட்டி வரும் அளவீடே, அது ஜனநாயகத்தின் மீது கொண்டிருக்கும் பற்றுதலைப் புலப்படுத்தும். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையும், அவர்களின் மேம்பாட்டில் அரசு காட்டிவரும் ஏளனப் போக்கும், நமக்கு ஓர் உண்மையைத் தெளிவுபடுத்துகின்றன. இந்திய ஜனநாயகம் ஒரு தேசியப் பொய் என்பதே அந்த உண்மை.
மேலும் கட்டுரைகள் படிக்க, www.dalithmurasu.comIf you have problem in reading this mail in Tamil, Right click on mail and click Encoding > Select Unicode (UTF-8)